Posted by : Unknown Saturday 5 September 2015

பேஸ்புக் நிறுவனத்தினால் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 பில்லியன் டொலர்களுக்கு கொள்வனவு செய்யப்பட்ட WhatsApp ஆனது உடனடித் தகவல்கள் உட்பட
தற்போது குரல் வழி அழைப்புக்களை ஏற்படுத்தும் வசதியையும் தருகின்றமை அறிந்ததே.
இந் நிலையில் மாதாந்தம் 900 மில்லியன் செயற்படு நிலையிலுள்ள பாவனையாளர்களை (Active Users) WhatsApp எட்டியுள்ளதாக Jan Koum என்பவரால் பேஸ்புக்
நிறுவனத்தின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த எண்ணிக்கையானது 600 மில்லியனாக காணப்பட்டதாகவும் 12 மாதங்களில் ஏறத்தாழ 50 சதவீதத்தினால்
அதிகரித்துள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு வீதத்தில் சென்றால் விரைவில் 1 பில்லியன் செயற்பாடு நிலையிலுள்ள பயனர்களை WhatsApp எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Followers

Powered by Blogger.

- Copyright © Department of BCA