Posted by : Unknown Sunday 18 January 2015

 
     கணினிகளின் பயன்பாடு பரவலாகி விட்டபின் புத்தகங்கள் மின்வடிவில் வரத்தொடங்கின. முதலில் காகிதப் புத்தகங்கள் கணினியில் படிப்பதற்காக ஒளிபடுத்தப்பட்டு (scan) ஆவணக் கோப்புகளாகத் தயார் செய்யப்பட்டன. பின்னர் மின் புத்தகங்களை படிப்பதற்காக கருவிகள் பல கண்டுபிடிக்கப்பட்டதால் பல கோப்பமைப்புகளில் மின்னூல்கள் இப்போது விற்கப்படுகின்றன.

       காகிதப் புத்தகங்களை எண்முறைப் படுத்த தொடங்கப்பட்ட முதல் திட்டம் குடன்பர்க திட்டமாகும். 1971 இல் மேஜைக் கணினிகளில் புத்தகங்களைப் படிப்பதற்காக இது தொடங்கப் பட்டது. 1990 இல், இணையம் விரிவுபடத் தொடங்கிய போது, மின்புத்தகங்கள் குறுந்தகடுகளில் விற்கப்பட ஆரம்பித்தன. 1993 ஆம் ஆண்டு மின் புத்தகங்களைப் படிப்பதெற்கென தனி மென்பொருள் வெளியிடப்பட்டது. அவ்வாண்டு வெளியான On Murder Considered as one of the Fine Arts என்ற புத்தகமே முதல் மின்புத்தகமாகக் கருதப்படுகிறது. அவ்வாண்டே இணையத்தின் மூலம் மின் புத்தகங்களின் விற்பனை தொடங்கியது. 1998 இல் ஐஎஸ்பின் (சர்வதேச புத்தகக் குறியீட்டு எண்) முதன் முதலில் ஒரு மின் புத்தகத்துக்கு வழங்கப்பட்டது.
          1998 ஆம் ஆண்டு மின் புத்தகங்களைப் படிப்பதெற்கென ராக்கெட் ஈபுக் மற்றும் சாஃட்புக் என்ற கருவிகள் சந்தையிடப்பட்டன. 1998-99 இல் மின்புத்தகம் விற்கும் வலைத்தளங்கள் தொடங்கப்பட்டன. அறிவியல் புனைவு கதைகளை வெளியிடும் பீன் பதிப்பகம், ஒர் சோதனை முயற்சியாக, தனது புத்தகங்கள் சிலவற்றை மின் புத்தகங்களாக்கி இணையத்தில் இலவசமாக வெளியிட்டது. 2000 இல் காப்புரிமைத் தளைகள் ஏதுமின்றி வெப்ஸ்கிருப்ஷன் நிறுவனம் மின்புத்தகங்களைத் விற்கத் தொடங்கியது. 2005 இல் மோபிபாக்கெட் மின் புத்தக நிறுவனத்தை வாங்கியதன் மூலம், உலகின் மிகப் பெரிய புத்தக விற்பனையாளரான அமேசான், மின் புத்தகச் சந்தைக்குள் நுழைந்தது. இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டில், சோனி ரீடர், இலியட், ஐரீட் போன்ற பல மின்புத்தக படிப்புக் கருவிகள் வெளியாகின. 2009 ஆம் ஆண்டு அமேசானின் கிண்டில் கருவி வெளியாகி மின்புத்தக விற்பனை சூடு பிடித்தது. 2010 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தின் பலகைக் கணினி ஐ-பேடு வெளியான பின், மின் புத்தக வர்த்தகத்தில் பெரும் போட்டி நிலவுகிறது. கூகுள் நிறுவனமும் தற்போது மின் புத்தக வர்த்தகத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது
சிறுகதை , சமூகத்தொடர், கவிதைகள், கட்டுரைகள், வரலாறு என பல்சுவை தமிழ் புத்தகங்கள் உள்ளது 
                                  பல்சுவை தமிழ் புத்தகங்கள்
No.
Book Title
Author
Download PDF 
Tamil book
1
 Free Tamil eBooks
2
 Free Tamil eBooks
3
Free Tamil eBooks
4
Free Tamil eBooks
5
Free Tamil eBooks
6
Free Tamil eBooks
7
Free Tamil eBooks
8
Free Tamil eBooks
9
Free Tamil eBooks
10
Free Tamil eBooks
11
Free Tamil eBooks
12
Free Tamil eBooks
13
Free Tamil eBooks
14
the-secret-tamil                                     
Free Tamil eBooks




Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Followers

Powered by Blogger.

- Copyright © Department of BCA