அதிகரிக்கும் ப்ளூடூத் தரவுப் பரிமாற்ற வேகம்

குறுகிய தூரங்களுக்குள் மொபைல் சாதனங்கள் ஊடாக வயர்லெஸ் முறையில் தரவுப் பரிமாற்றம் செய்வதில் ப்ளூடூத் ஆனது முக்கிய பங்கு வகிக்கின்றது.
தற்போது இதன் வேகத்தினை 100 சதவீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக Bluetooth Special Interest Group எனும் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ள இவ்வேக அதிகரிப்பு தொடர்பாக Bluetooth Special Interest Group அமைப்பின் தலைவர் Toby Nixon தெரிவிக்கையில் இத்திட்டத்திற்காக தற்போது 2 ட்ரில்லியன் டொலர்கள் ஒருக்கப்பட்டுள்ளதாகவும், ப்ளூடூத் தொடர்பான மேலதிக மேம்படுத்தல்களுக்காக 2025 ஆம் ஆண்டில் 11.1 ட்ரில்லியன் டொலர்கள் முதலீடு செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Tuesday 24 November 2015
Posted by Unknown

2025 ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது Windows 10 இயங்குதளத்தின் சகாப்தம்

இயங்குதள வடிவமைப்பில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனம் அண்மையில் விண்டோஸ் 10-ஐ அறிமுகம் செய்திருந்தது.
இவ் இயங்குதளத்திற்கான அப்டேட் மற்றும் ஏனைய உதவிகள வழங்குவதை 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது குறித்த இயங்குதளத்திற்கான அன்டி வைரஸ் அப்டேட்கள், குறைபாடுகள் நீக்குதல், மேம்படுத்தல்கள் என்பவற்றினை நிறுத்தவுள்ளது.
இதேவேளை விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கான அப்டேட் மற்றும் உதவிகளை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் திகதியுடனும், விண்டோஸ் 8.1 இயங்குதளத்திற்கான அப்டேட், உதவிகளை 2023 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதியுடனும் நிறுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் விண்டோஸ் இயங்குதளம் 2025 ஆம் ஆண்டிற்கு பின்னர் பாவனையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Sunday 6 September 2015
Posted by Unknown

ஆராய்சி செய்தி பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் குணமாக்கும் "ஊதா நிற உருளைக்கிழங்கு"

ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தென் அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட ஊதா நிற உருளைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதாகும்.
இந்நிலையில் இந்த உருளைக்கிழங்கை மதியம் மற்றும் இரவு வேளைகளில் எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது.
இது பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலியின் மீது நடத்தப்பட்ட சோதனையில் நிரூபணமாகியுள்ளது.
உருளையில் உள்ள ஆந்தோசியானின்ஸ், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் ஸ்டார்ச் ஆகியவை இந்தப் புற்றுநோய் செல்களை வேருடன் அழிக்கும் காரணியாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், பியூட்ரிக் அமிலம் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் கூட்டுவதன்மூலம், நாள்பட்ட அழற்சியைக் சுருக்கி, புற்றுநோய் செல்களை அழிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
எனவே, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை புற்றுநோயைத் தடுக்க இந்த உருளைக்கிழங்கை உட்கொண்டாலே போதும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Posted by Unknown

கூகுளின் புத்தம் புதிய லோகோ!


இணைய உலகை தொடர்ந்தும் கலக்கிக் கொண்டிருக்கும் கூகுள் நிறுவனம் புதிய லோகோவினை வெளியிட்டுள்ளது.
1998 ஆண்டு செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கூகுள் நிறுவனம் தனது 17 ஆண்டு கால பூர்த்தியை முன்னிட்டு இப் புதிய லோகோவினை வெளியிட்டுள்ளது.
மேலும் குறித்த கால இடைவெளிகளில் தொடர்ச்சியாக தனது லோகோவினை கூகுள் நிறுவனம் மாற்றி வந்துள்ளமை தெரிந்ததே.
இப் புதிய லோகோ மாற்றப்பட்ட செய்தியினை கூகுள் டூடுள் ஊடாக நேற்றைய தினம் தனது அனைத்து பயனர்களுக்கும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய லோகோவில் உள்ள பத்து முக்கிய அம்சங்கள் இதோ.
1. இந்த புதிய லோகோ கூகுளின் ஏழாவது லோகோ.
2. கூகுள் லோகோவை மாற்றுவது புதிதல்ல.ஆனால் கூகுள் முதல் முறையாக லோகோ மாற்றம் பற்றி தனது முகப்பு பக்கத்தில் டூடுல் சித்திரம் மூலம் உலகிற்கு தகவல் தெரிவித்துள்ளது. முகப்பு பக்கத்தில் உள்ள டூடுலை (லோகோ) கிளிக் செய்தால் இது பற்றிய விவரத்தை காணலாம்.
3.இந்த புதிய லோகோவில் ஒருவித முழுமையையும், எளிமையையும் கவனிக்கலாம். கணிதவியல் வடிவத்தின் தூய்மை மற்றும் பள்ளி புத்தகத்திற்கான அச்சு வடிவம் இரண்டின் கலைவையே இதற்கு காரணம்.
4. கூகுளின் பழைய லோகோவில் பாருங்கள். இ எனும் எழுத்து சற்று சாய்வாக இருக்கும். புதிய லோகோவிலும் இ எழுத்து சாய்ந்தே இருக்கும். கூகுளின் எதையும் வித்தியாசமாக செய்யும் கலாச்சாரத்தின் அடையாளம் இது.
5.புதிய லோகோ மட்டும் அல்ல, புதிய எழுத்துருவும் உருவாக்கப்பட்டுள்ளது. கூகுளின் புதிய சேவைகளை அறிவிக்க இந்த எழுத்துரு பயன்படுத்தப்படும். லோகோ மற்றும் சேவை அறிவிப்புகளுக்கு இடையிலான தனித்தன்மை தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.
6. இதற்கு முன்னர் செல்போன்களில் குறைந்த வேக இணைப்பு எனில் அதற்கேற்ற கூகுள் லோகோ இடம்பெறும். இனி எல்லா இணைப்புகளிலும் ஒரே லோகோ தான்.
7.பழைய லோகோவின் எடை தெரியுமா? 14,000 பைட்கள். புதிய லோகோ மிகவும் இலேசானது. 305 பைட் தான் இதன் எடை.
8. புதிய லோகோவில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய வண்ணங்களின் துடிப்பான தன்மை லோகோவின் முழுமைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளது.
9. கூகுள் மேற்கொண்டுள்ள லோகோ மாற்றங்களில் இதுதான் மிகவும் பெரியது. இதற்கு முந்தைய மாற்றங்கள் சிறிய அளவிலானவையே.
10. லோகோவின் சுருக்கமான வடிவத்தை குறிக்கும் ஆங்கில எழுத்தான சிறிய ஜிக்கு பதிலாக பெரிய ஜி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்தில் சிவப்பு, மஞ்சள்,பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு வண்ணங்களும் இருக்கும்.

Saturday 5 September 2015
Posted by Unknown

கடலுக்கடியில் இணைய கேபிள்கள்: வெளியான வரைபடம்

நவீன உலகில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இணைய இணைப்பானது நாடு விட்டு நாடு என்றல்லாமல் கண்டங்களை விட்டு கண்டங்களினூடாக பரந்து காணப்படுகின்றது.இவ்வாறு கண்டங்களினூடு இணைய இணைப்பு விரிவுபடுத்தப்படும்போது இணைய கேபிள்கள் கடலின் அடியின் ஊடாகவும் செல்கின்றன.
இவ்வாறு 8,000 மீற்றர்கள் ஆழம் வரை ஊடுருவிச் செல்லும் 885,000 km நீளமான இணையக் கேபிளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இக் கேபிள்கள் 8 சென்ரி மீற்றர்கள் வரை தடிப்புடையதாகவும், சர்வதேசத்திற்கான தரவுகளில் 99 சதவீதமானவை இவ்வாறான கேபிள்களின் ஊடாகவே கடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by Unknown

Followers

Powered by Blogger.

- Copyright © Department of BCA