Posted by : Unknown Thursday 8 January 2015




பிரிட்டனில் வெற்றிகரமாக சோதனை....!
                                                                 உலகிலேயே மிக வேகமான பிராட்பேண்ட் இண்டர்நெட் இணைப்பு
வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனின் அல்காடெல்-லூசெண்ட் (Alcatel-
Lucent) மற்றும் பி டி (BT) நிறுவனங்கள் இந்தச் சோதனையை செய்தன. 410 கிலோ மீட்டர் தூரத்துக்கு இடையே இதற்கான இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. நொடிக்கு 1.4 டெராபிட்ஸ் (TeraBits)
வேகத்தில் செயல்படும் இந்த பிராட்பேண்ட் மூலம் ஒரு நொடியில் 44 ஹெச் டி (HD) திரைப்படங்களை அனுப்ப முடியும். எனினும் பொதுமக்களுக்கு இந்த இணைப்பு கிடைப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என அல்காடெல்-லூசெண்ட்  (Alcatel-Lucent) நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Followers

Powered by Blogger.

- Copyright © Department of BCA